Categories
தேசிய செய்திகள்

78 யூடியூப் சேனல்கள் முடக்கம்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக 78 youtube சேனல்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமீப காலத்தில் youtube சேனல்களை மத்திய அரசும் முடக்கியுள்ளதா? அப்படி என்றால் அதன் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் எத்தனை? எதற்காக முடக்கப்பட்டது என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 பிரிவின்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு இந்தியாவின் பாதுகாப்பு ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய வகையில் கருத்துக்களை தெரிவித்த காரணத்திற்காக மத்திய அரசால் youtube சேனல்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகளை வெளியிடும் 78 யூட்யூப் சேனல் மற்றும் அதன் சமூக வலைத்தள கணக்குகள் 2021-22 ஆம் ஆண்டில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 மீறியதற்காக இதே காலகட்டத்தில் 560 youtube வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |