மெக்சிகோவில் இன்று ஒரே நாளில் புதிதாக 770 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு இதுவரை ஏற்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கை 19,080 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெக்சிகோவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மெக்சிகோவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,19,355 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு உலக நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி திணறி வருகின்றன.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 67 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 39 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது.