Categories
தேசிய செய்திகள்

மும்பையில் மேலும் 77 பேருக்கு கொரோனா… தலைசுற்ற வைக்கும் பாதிப்பு எண்ணிக்கை..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் இறந்துள்ளனர்.

இதையடுத்து மும்பையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,120 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகபடியாக பாதித்துள்ளது. மேலும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. ஊரடங்கு ஆதரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு 24வது நாளாக அமலில் உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதின் காரணத்தால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 1076 புதிய வழக்குகள் மற்றும் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 11,616 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல, இதுவரை 1766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் இதுவரை 452 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 56 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |