இந்தியா முழுவதும் இதுவரை 769 பேர் சிக்கித்தவித்து வருவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரை கண்டறியும் வகையில் ” இந்தியாவில் சிக்கியவர்கள்” என்ற போர்டலை உருவாக்கியது. அதில், கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 769 பேர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, இணைய முகவரியின் மூலம் பதிவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு தகுந்த உதவிகள் வழங்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக வெளிநாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கியுள்ளனர்.
அதனடிப்படையில், மலேசியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டவரை அவர்கள் நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல, இந்தியாவில் சிக்கி தவிக்கும் பிரிட்டன் நாட்டினரை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு சார்பில் போர்டல் உருவாக்கப்பட்டு வெளிநாட்டவரை கண்டறியும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.