இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் கடந்த 2011 ஆம் வருடம் சட்டப்படி குற்றம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை விளம்பரம் செய்வதற்காக சரவணன் என்பவரிடம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் இதனை அடுத்து படத்தின் விளம்பர செலவு ரூபாய் 76 ஆயிரத்து திருப்பி தராததால் விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் ஏ சந்திரசேகரிடம் பணத்தை செலுத்த உத்தரவிட்டிருக்கின்றது.
ஆனால் அவர் பணத்தை செலுத்தாததால் சாலிகிராமத்தில் உள்ள எஸ் ஏ சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில் உள்ள ஏசி, டேபிள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எஸ்.ஏ சந்திரசேகர் வீட்டில் ஜப்தி செய்ய சென்ற ஊழியர்களை அனுமதிக்காததால் காவல்துறையின் உதவி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரூபாய் 76 ஆயிரம் பணத்திற்காக எஸ்.ஏ சந்திரசேகரன் வீடு ஜப்தி செய்யப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.