நாட்டின் 75-ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களிலும் தேசிய கொடியை பறக்கச் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் நாட்டின் 75-ஆம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பவள ஆண்டை பெரிய அளவில் கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்மானித்திருக்கின்றன.
அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. மத்திய அரசு, காலை 7:30 மணியளவில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும், மாலை ஆறு மணிக்குள் தேசிய கொடி இறக்கப்பட வேண்டும். கொடியை காதி துணியால் தான் தயாரிக்க வேண்டும் என்று பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்த விதிமுறைகளில் மத்திய அரசு சில மாற்றங்கள் செய்திருக்கிறது.
இது பற்றி வெளியான சுற்றறிக்கையில், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக இரவு நேரங்களிலும் தேசிய கொடியை பறக்க செய்யலாம். இது மட்டுமல்லாமல் பட்டு, பருத்தி, பாலியஸ்டர் மற்றும் காதி துணிகளால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையும் ஏற்றலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது.