Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும்… பல்வேறு கோரிக்கைகள்… பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் கேஸ் சிலிண்டருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் மதுரை சாலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு தேவையான அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர். சக்கரவர்த்தி தலைமை தங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவர் ராமசாமி, மாவட்ட துணைத்தலைவர் நேதாஜி சேகர், தேனி நகர செயலாளர் அன்பு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து கேஸ் சிலிண்டருடன் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

Categories

Tech |