Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. விண்வெளியில் இருந்து வந்த வாழ்த்து…. செம வைரல்….!!!!

விண்வெளி வீராங்கனை சுதந்திர தின விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இத்தாலியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோ வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் இஸ்ரோ உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். இந்தியா பேரிடர்களை கவனிப்பதற்காக நிசார் என்ற புவியியல் அமைப்புடன் செயல்படுகிறது. சுகன்யான் திட்ட பணியில் இஸ்ரோ செயல்படுவதற்கு நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பிற விண்வெளி நிறுவனங்களின் சார்பாக நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |