சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றுகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையடுத்து காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக ஒத்திகை நடைபெற்ற நிலையில், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலிலும் பலத்த போலீஸ் போடப்பட்டதுடன் போடப்பட்டதுடன் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர். இதேபோன்று மாவட்டத்தின் எல்லை பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.