தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தலங்களை இன்று திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொடைக்கானல் பிரயாண்ட பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்காவை திறக்க முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் 75 நாட்களுக்கு பிறகு இன்று பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.