Categories
மாநில செய்திகள்

75வது சுதந்திர தின விழா…. தமிழக மாநில அரசின் விருது யாருக்கெல்லாம் தெரியுமா?….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருதை அரசு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தமிழக அரசின் மாநில விருதுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறந்த மாவட்ட ஆட்சியர்களாக தினேஷ் பொன்ராஜ், அருண் தம்புராஜ் தேர்வாகி உள்ளனர். சிறந்த மருத்துவராக உதகையை சேர்ந்த ஜெய் கணேஷ் மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனமான புதுக்கோட்டையில் உள்ள ரெனோசான்ஸ் அறக்கட்டளைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சிறந்த சமூகப் பணியாளராக மதுரையை சேர்ந்த அமுத சாந்தி தேர்வாகி உள்ளார். மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனம் என்று டாபே ஜெ ரிஹாப் சென்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக திண்டுக்கல் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்வாகி உள்ளது. இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கான விருது சுதந்திர தின விழாவின் போது முதல் அமைச்சரால் வழங்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியருக்கான விருது மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |