Categories
தேசிய செய்திகள்

மக்களே…. பழைய சாதரண டிவியை ஸ்மார்ட் டிவி ஆக மாற்ற புதிய டிவைஸ்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவில் அமேசான்  பழைய எல்சிடி அல்லது  எல்இடி டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற புதிய “ஃபயர் டிவி ஸ்டிக் லைட்டை” அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை புதிய அலெக்சா வாய்ஸ் ரிமோட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிய ஸ்மார்ட் ஸ்டிக் ரிமோட்டில் பிரபலமான OTT பயன்பாடுகளுக்கான ஹாட்கீ பட்டன்கள் உள்ளது. இது ஃபயர் டிவி ஸ்டிக் டிவைஸ் பிரிவில் உள்ள இரண்டாவது லைட் வெர்ஷன் கேட்ஜெட் ஆகும். இதன் முதல் பதிப்பு செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அலெக்சா வாய்ஸ் ரிமோட்டுடன் கூடிய புதிய ஃபயர் டிவி ஸ்டிக் டிவைஸ் விலை ரூ.3,999 மட்டும்தான். இந்த சாதனம் ஏற்கனவே அமேசான் இந்தியாவின் தளத்தில் கிடைக்கிறது. இதற்கு முந்தைய ஃபயர் டிவி ஸ்டிக் லைட் ரூ.3499 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் பழைய வெர்சன் வாய்ஸ் அசிஸ்டன்ட் பயன்பாடுகளுக்கான ஹாட்கீ பட்டன் வரவில்லை. ஆனால் புதிய அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் லைடில் 8GB சேமிப்பு உள்ளது. இதில் 1.7Ghz குவாட்கோர் புராசஸர் நிறுவப்பட்டுள்ளது. இந்த சாதனம் முழு எச்டி தெளிவுரை உள்ளடக்கிய ஸ்ட்ரீமிங்கை சேவையை ஆதரிக்கிறது. அதனைத் தொடர்ந்து HDMI 1080p அல்லது 720p, 60/50Hz திறன் கொண்ட உயர் வரையறை டிவிகளுடன் வேலை செய்கிறது. அதுமட்டுமில்லாமல் அமேசான் மியூசிக், அமேசன் பிரைம் விடியோ மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஆகியவற்றுக்கான தனி ஹாட்கீ பட்டன்களும் புதிய அமேசன் ஃயர் டிவி ஸ்டிகில் உள்ளது. பயனர்கள் வாய்ஸ் அசிஸ்டன்ட் பட்டன் உதவியுடன் அமேசான் அலெக்சாவை அணுகலாம். அலெக்சா வாய்ஸ் லைவ் ரிமோட் ப்ளூடூத் ஆதரவுடன் வருகிறது. இது தேவையான கண்டண்டுகளை எளிதாக குரல் மூலம் தேடுகிறது. மேலும் புதிய அலெக்சா வாய்ஸ் ரிமோட் லைட் முந்தைய தலைமுறை மாடலைவிட 42.5 கிராம் எடை குறைவாக உள்ளது. இதன் எடை 43.4 கிராம் ஆகும்.

Categories

Tech |