தமிழகத்தில் கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி நாளை ஜூலை 24ஆம் தேதி தமிழக முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறுகிறது.
இந்த பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வு நாளை நடைபெற உள்ளதால் தேர்வர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது தேர்தல்கள் நடைபெறும் சரியாக 8.30 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். ஹால் டிக்கெட்டை எடுத்து வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.