Categories
மாநில செய்திகள்

7,296 புதிய பணி…. ஆண்களுக்கு மட்டும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. உடனே விண்ணப்பிங்க….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த பணியாளர்கள் மூலம் நிரப்ப மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு (TN Govt) துணை சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையங்களில் பணியாற்ற இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் 2448 துணை பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள், 4848 இடைநிலை சுகாதார பணியாளர்களை மாவட்ட சுகாதார துறை  மூலமாக தேர்வு செய்து பணியமர்த்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பணியிடத்திற்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் வேலை செய்தவர்களுக்கு இதில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |