பெங்களூரில் போக்குவரத்து காவல் துறையினர் சாலை விதியை மீறியவர்களிடமிருந்து அதிரடி அபராத வசூலில் ஈடுபட்டது.
இந்தியாவில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் அதிகளவு அபராதம் வசூலிப்பதற்கான சட்டம் கடந்த வாரம் அமலான நிலையில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் போக்குவரத்து அதிகாரிகள் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து அதிக அளவு அபராதம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக சில இடங்களில் இந்த புதிய அபராத தொகை அடிதடிகளுக்கும் காரணமானது.
இதில் குறிப்பாக பெங்களூரு போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களில் சாலை விதியை மீறிய சுமார் 6800 பேரிடமிருந்து ரூ. 72.5 லட்சம் தொகையை அபராதமாக வசூலித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் முகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதுமட்டுமின்றி சாலை விதியை மீறுவோருக்கு பல ஆயிரக் கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டதால் சிலர் தங்களது வாகனத்தையே ஒப்படைத்த சம்பவங்களும் ,
வாகனத்தை எரித்து விட்டு சென்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து சாலை விதிகளை மீறுவோருக்கு தற்போது குறைந்த பட்ச அபராத தொகை ரூ. 1000 ஆகவும், குறிப்பாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு அதிகபட்சமாக ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.