இலங்கையின் விமான நிறுவனத்தில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்ள இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் ஒரே சமயத்தில் திரண்டு வந்திருக்கிறார்கள்.
கொழும்பு நகரில் இருக்கும் கத்தார் ஏர்வேஸ் விமான நிலைய கிளை அலுவலகத்தில் பணியிடங்கள் காலியாக இருந்தது. எனவே, அந்நிறுவனம் இணையதளம் மற்றும் நாளிதழ்களில் காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. நாட்டில் நிதி நெருக்கடி காரணமாக பணியின்மை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வேலைக்காக விளம்பரம் வெளியிட்டவுடன், இளைஞர்கள் கொழும்புவில் இருக்கும் கத்தார் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு திரண்டனர். சுமார் இரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இளைஞர்கள் வரிசையாக நின்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 35 பணியிடங்களுக்கு சுமார், 700 க்கும் அதிகமானோர் சென்றிருக்கிறார்கள்.