Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்த 700 பேர்… 27 பேரிடம் சோதனை செய்ததில் 7 பேருக்கு கொரோனா உறுதி!

கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு வந்த 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட எல்லையில் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 27 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 12 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் வெளியானால், கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக அங்கு கடைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக, சில்லறை வியாபாரத்திற்கு அனுமதி இல்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மே 3ம் தேதி வரை முழு அடைப்பை வியாபாரிகள் அறிவித்தனர். இந்த நிலையில், கடைகள் இயங்காததால் கோயம்பேட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோர் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் பகுதிக்கு வந்த 700 பேர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தனியார் கல்லுரிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சோதனை முடிவில் அதிக மக்களுக்கு கொரோனா இருக்கும் என அஞ்சப்படுகிறது.

Categories

Tech |