பிப்ரவரி 7-ஆம் தேதி யூரோ லாட்டரியில் இந்திய மதிப்பில் 700 கோடி (90 மில்லியன் யூரோ) தொகை பரிசாக அள்ளிய ஜெர்மானியர் இதுவரை தொகையை வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த தகவலை நிர்வாகிகள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினர். வெற்றி பெற்றவர் லாட்டரி சீட்டை உரிய நிர்வாகிகளிடம் கொடுத்து தொகையை பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
ஜெர்மனியின் இந்த லாட்டரி சீட்டை 18.5 யூரோ (1,443.53 INR) தொகைக்கு வாங்கியுள்ளார். வெற்றியாளரின் முகவரி நிர்வாகிகளும் தெரியும் என்றாலும் பாதுகாப்பு காரணங்களால் வெளியிட முடியாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லாட்டரி ஜாக்பாட் சட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு வரை குறித்த நபருக்கு அந்த 700 கோடி கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. காலம் தவறினால் 700 கோடி தொகை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நிர்வாகிகள் தரப்பில் அறிவித்துள்ளது.
வெற்றி பெற்றவர் லாட்டரி சீட்டை தவறவிட்டு இருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.