செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பெண்களைப் பொருத்தவரை இலவசமாக கேஸ் சிலிண்டர் 70 வருடமாக காங்கிரசும் திராவிட முன்னேற்ற கழகமும் பண்றாத விஷயங்களை பாரதிய ஜனதா கட்சி இரண்டு வருடத்தில் நிறைவேற்றினோம். ஏழைத் தாய்மார்களுக்கு இலவசமான கேஸ் கனெஷென் பாரத ஜனதா கட்சி கொடுத்தது.
இரண்டு வருடத்தில் இந்தியாவில் இருக்கின்ற கிட்டத்தட்ட எட்டு கோடி பேருக்கு 70 வருடத்தில் காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகம் செய்யாததை பாரத ஜனதா கட்சி செய்திருக்கிறது. குறிப்பாக அத்தனை ஏழைத் தாய்மார்கள், பட்டியலில் இருப்பவர்கள், ஓபிசி இருக்கிறவர்கள் பயன்பெறும் விதத்தில் இலவசமாக கேஸ் கொடுத்து இருக்கிறது.
இதை யாரும் யோசிக்கவில்லை. அதைபோல் பெண்களை பொறுத்தவரை ஜன்தன் வங்கி கணக்கு பாரத கட்சி ஏற்படுத்தியது . அதைப்போல் கொரனா காலகட்டத்தில் மூன்று மாதம் 500 ரூபாய் கொடுத்தது மத்திய அரசாங்கம். தமிழ்நாட்டில் யாருமே பேசாத விஷயங்கள்…. கிராமத்தில் தாய்மார்கள் 2014 முன்னாடி கஷ்டப்பட்டது எங்களுக்கு தெரியும். இயற்கை உபாதை போவதுற்கு காத்திருந்த காலம் மாறி வெறும் ஐந்து வருடத்தில் ஓவ்வொரு வீட்டுக்கும் இலவச கழிப்பிடம் பாரத ஜனதா கட்சி கொடுத்துள்ளது.
ஸ்டண்ட் ஆப்இந்தியா லோனில் இந்தியாவில் அதிகளவு பெண்கள் பயன்பட்டது தமிழ்நாட்டில் தான். இப்படி எங்கள் சாதனை பட்டியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரனா காலம், உலக அளவில் மந்தமான சூழ்நிலை, உலகளவில் இறப்பு எண்ணிக்கை ஆயிரமாக தாண்டி உள்ளது. ஆனால்இந்தியாவில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல் கொரனா கட்டு படுத்தப்பட்டிருக்கிறது. இலவசமாக தடுப்பூசி கொடுக்கப்பட்டிருக்கிறது என பாரத ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. விலை ஏற்றம் என்பது நிரந்தரமானது கிடையாது, குறையும் என பாரத ஜனதா கட்சி அறிவித்துள்ளது.