7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள ஆயர்பாடி ஊராட்சியில் வசிக்கும் 7 வயது சிறுவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் மேல் சிகிச்சைக்காக வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து சிறுவன் வசிக்கும் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் கோவிந்தன் தூய்மை பணிகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் அப்பகுதியில் கொசு மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை தெளித்து வீடு வீடாக சென்று யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா என அவர் ஆய்வு செய்துள்ளார்.