Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை விவகாரம்…. அதிர்ச்சி அளித்த ஆளுநர்… தொடங்கின இடத்திற்கே வந்த வழக்கு..!!

எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரையை 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஆளுநர் நிராகரித்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்து வந்தார். சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி ஏழு பேர் குறித்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என தெரிவித்தார். ஆளுநர் தரப்பு தனது கருத்தை தற்போது வெளியிட்டுள்ளது. 7 பேர் விடுதலை குறித்த விவாதத்தில் குடியரசுத் தலைவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜீவ் காந்தி கொலையாளி 7 பேர் விவகாரத்தில் சட்ட ரீதியாக கலந்து ஆலோசனை செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிற்பதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |