Categories
அரசியல் மாநில செய்திகள்

“7பேர் விடுதலை” மு.க.ஸ்டாலின் கேள்வியும்… OPSஇன் பதிலும்…!!

தமிழகத்தில் 7 பேர் விடுதலை குறித்து பேரவையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டநாள்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலை தமிழக ஆளுநரின் ஒற்றை கையெழுத்திற்க்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் காலம் கடத்துவதன் காரணமாக எதிர்க்கட்சிகள் சமூகஆர்வலர்கள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றமும் இவ்விவகாரத்தை பொறுத்த வரையில் ஆளுநர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று  கைவிரித்துவிட்டது.

Image result for ops vs stalin

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், தமிழகத்தில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை எந்த நிலையில் உள்ளது என்றும், இதுவரை ஏன் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஏழு பேரின் விடுதலைக்காக ஆளுநரின் பதிலை எதிர்பார்த்து தமிழக அரசு காத்திருக்கிறது என்று  தெரிவித்தார்.

Categories

Tech |