பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவிற்கு அருகில் போதை பொருள் கடத்தல் கும்பலை தேடியபோது 7 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ டி ஜெனிரோ நகரத்திற்கு அருகில் இருக்கும் மாங்குரோவ் என்ற வனப்பகுதிகளுக்கு இடையில் வாழும் மக்கள், போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. எனவே, காவல்துறையினர் அந்த பகுதியில் அடிக்கடி சோதனை மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், அங்கிருந்து காவல்துறையினரால் ஏழு நபர்களின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் காவல் துறையினரால் கொடுமைகளை அனுபவித்து கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை அப்பகுதியை சேர்ந்த 1096 நபர்களை காவல்துறையினர் கொன்றதாக கூறப்பட்டுள்ளது.