அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒத்துக்கிட்டின் கீழ் தனியார் கல்லூரியில் இடம் கிடைக்குத்தும் வாய்ப்பை தவறவிட்ட 4 மாணவிகளுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மூலம் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கான கலந்தாய்வு நடைபெற்றது. இதற்காக 47 மருத்துவ இடங்கள் ஒதுக்கப் பட்டிருந்தன.
இன் நிலையில் முதற்கட்ட கலந்தாய்வு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வாய்ப்பை தவறவிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்றைய கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்க வேண்டுமா என்ற குழப்பத்தில் அதிகாரிகள் மாணவர்களை நெடுநேரம் காக்க வைத்தனர். மாணவிகள் சண்டையிட்ட பின்னர் சிறப்பு கலந்தாய்வு நடத்தி வழக்கு தொடர்ந்து எட்டு பேரில் 4பேருக்கு மட்டுமே மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டு அரசு ஆணை வழங்கப்பட்டது.