Categories
தேசிய செய்திகள்

7 வினாடிகள்…..! “மரணத்திற்குச் சென்ற நபர்”….. நொடியில் காப்பாற்றிய மருத்துவர்….. வைரல் வீடியோ….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் மருத்துவர் முன்பு அமர்ந்திருந்த நோயாளிக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர் நொடிப்பொழுதில் அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் பிரபல இருதய நோய் மருத்துவராக இருக்கும் அர்ஜுன் அத்நாயக் என்பவரிடம் மருத்துவம் பார்ப்பதற்கு நோயாளி ஒருவர் வந்துள்ளார். வரும்போது நன்றாக இருந்த அவர் திடீரென்று சுயநினைவு இன்றி இருக்கையில் சாய்ந்தார்.

அதன் பிறகு மருத்துவர் வேகமாக ஓடிச் சென்று நோயாளியின் மார்பில் குத்தினார். இதில் நோயாளியின் இருதயம் மீண்டும் செயல்பட தொடங்கியது. நொடி பொழுதில் மரணப்படுகைக்குச் சென்ற நபரை மருத்துவர் மீட்டு சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து நோயாளி மீண்டு வந்தார். இந்த வீடியோ அந்த மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த பலரும் மருத்துவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலுதவி சிகிச்சை எப்படி செய்ய வேண்டும் என்பது தொடர்பான வழிமுறையை பள்ளி பாடங்களில் வைக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |