வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். இந்த பகுதியில் 25 சிறிய கடைவீதிகள் இருக்கிறது. இந்த பாரிஸ் கார்னரில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இங்குள்ள பர்மா பஜார் எக்ஸ்டென்ஷனில் மொத்தம் 272 கடைகள் அமைந்துள்ளது. இதில் 256 கடைகள் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சிக்கு 58 லட்ச ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் திடீர் அதிரடியாக வாடகை செலுத்தாத அனைத்து கடைகளுக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு கடைக்கும் ரூபாய் 400 மட்டுமே மாதம் வாடகை பணம் செலுத்த வேண்டிய நிலையில், கடைக்காரர்கள் வாடகை பணத்தை மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் உடனடியாக கடைக்காரர்கள் வாடகை பணத்தை செலுத்துவதற்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இந்த வாடகை பணத்தை செலுத்துவதற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பும் கடைக்காரர்கள் கண்டுகொள்ளாததால் தான் சீல் வைத்து நடவடிக்கை எடுத்ததாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலரான டேவிட் மனோகர் கடந்த 7 வருடங்களாக வாடகை பணம் செலுத்தாமல் இருந்தும் தற்போது நடவடிக்கை எடுத்தது எதற்காக எனவும், வாடகை பணத்தை சரிவர செலுத்தாதல் மாநகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.