தென்னாப்பிரிக்காவில் தாமஸ் கோபோ என்ற நபரை டம்பஸ்ட் கிரிமினல் என கடந்த 7 வருடங்களாக காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இவரை 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹாட்வேர்டு பொருட்களை திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் வலைவீசி தேடி உள்ளனர். இந்நிலையில் 7 வருடமாக காவல்துறையினர் தேடியும் கிடைக்காத தாமஸ் கோபோ தானாகவே சென்று காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
அதாவது தாமஸ் கோபோ தான் விண்ணப்பித்திறந்த போலீஸ் வேலை குறித்து கேட்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது தான் அவர் தேடுதல் பட்டியலில் இருக்கும் ஒரு முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. இதனையடுத்து பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப தாமஸ் கோபோவை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் தாமஸ் கோபோ மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.