தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே பாலியல் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு புதிய சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் ஒரு சம்பவம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
அதன்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடினான்.அதில் படுகாயம் அடைந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.அந்த சிறுவன் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கொலை வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.