பாகிஸ்தானின் கோசார் நகரில் மர்தான் பகுதியைச் சேர்ந்த கிருபா என்பவர் தன் 7 வயது மகள், அவரது தாய், பாட்டி, சகோதரியுடன் பக்கத்து வீட்டிற்குச் சென்றதாகவும், சிறிது நேரத்தில் அவளைக் காணவில்லை என்றும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் குர்ஆன் கவானியில் பங்கேற்ற தங்கள் அண்டைவீட்டு மாடியிலிருந்து எரிக்கப்பட்ட துர்நாற்றம் வருவதை அடுத்து குடும்பத்தினர் மேலே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு எரிந்த கட்டிலைக் கண்டனர். அதன்பின் குடும்பத்தினர் அருகிலுள்ள கட்டுமானத்தின் வீட்டிற்கு விரைந்தனர். அப்போது தங்களது மகளின் எரிந்த உடல் தண்ணீர் தொட்டியில் கிடப்பதை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் கொலையாளிகள் சில மணி நேரத்தில் கைது செய்யப்படுவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.