சென்னை புத்தக கண்காட்சியில் 7 வயது நாவல் ஆசிரியர் வாசகர்களை வியக்க வைத்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏழு வயதான ரமணா என்ற சிறுவன் எழுதிய சிம்பாவின் சுற்றுலா நாவல் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. மூத்த ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ் மணி… எழுத்தாளரான சிறுவன் ரமணாவை நேற்று சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய சிறுவன் ரமணா, தான் கதை சொல்ல சொல்ல தன் அக்கா எழுதிக் கொடுத்தார் என்றும், அந்த எழுத்துக்களை அப்பா புத்தகமாக வெளியிட்டார் என்றும் தெரிவித்தார். தற்போது நிறைய பேர் புத்தகங்களை வாங்கி பாராட்டு தெரிவிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். தொடர்ந்து வஉசி பதிப்பக கவிஞர் இளையபாரதி, NCBH நிர்வாகி, பாரதி புத்தகாலயம் முத்து ஆகியோர் புத்தக கண்காட்சி குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.