துறையுறை அடுத்த சின்னசேலம் பட்டி கிராமத்தில் கவுரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும் அவர் கவுரியை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து இருவரையும் சேர்த்து வைக்க போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதற்காக மீன் கடை உரிமையாளரான சிங்களாந்தபுரத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரை உதவிக்கு அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து இது தொடர்பான நடவடிக்கை மற்றும் வக்கீல் கட்டணம் எனக் கூறி ரூபாய் 7 லட்சம் வரை பெற்றுக் கொண்டு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுரேந்தர் மீது கவுரி துறையூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து சுரேந்தரை கைது செய்துள்ளனர்.
Categories
“7 லட்சம் மோசடி செய்த மீன் கடை உரிமையாளர்”….. கைது செய்த போலீசார்….!!!!!!!!
