புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் அருகே நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் நடராஜன் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் நடராஜன் மீது பாவூர்சத்திரம் காவல்துறையினர் 7 முறை வழக்குபதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடராஜனின் கடையில் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.