கேரளாவில் ஐந்து நாட்களுக்குபலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வட கர்நாடகா கடற்கரையில் இருந்து மன்னார் வளைகுடா வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறன்து. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. கேரளாவில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மி.மீட்டர் முதல் 115.5 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.