7 மாணவர்களை பாலியல் வன்முறை கொடுமை செய்த பள்ளி வார்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஹயாத் நகர் என்ற பகுதியில் ஸ்ரீ சைதன்யா என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பல மாணவர்கள் படித்து வரும் நிலையில் 150 மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த ஹாஸ்டலின் வார்டனாக முர்ராம் கிருஷ்ணா என்பவர் கடந்த மாதம் வேலையில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் அந்த படியில் படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
மாணவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவர்களை எழும்பி அவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவிக்க இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திலும், காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் கிருஷ்ணாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் மேல் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைந்தன. இது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.