Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“7 சிறுவர்களுடன் ஓரினசேர்க்கை” உடற்கல்வி ஆசிரியர் கைது….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் செந்தில்குமார் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் இல்லத்தில் இருக்கும் 7 சிறுவர்களுடன் கடந்த ஒரு வருடமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து இல்லத்தின் கண்காணிப்பாளர் விஜயகுமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |