Categories
மாநில செய்திகள்

7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் அரசு மாற்றம் செய்து வருகிறது. அந்தவகையில் மேலும் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஐ.பி.எஸ்., மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணியில் இருந்த இளங்கோ ஐ.பி.எஸ்., சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஐ.பி.எஸ்., ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கடலோர காவல் துறை, கண்காணிப்பாளர் ஜெயந்தி ஐ.பி.எஸ்., சேலம் மண்டல அமலாக்கத் துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மண்டல அமலாக்கத் துறை கண்காணிப்பாளராக இருந்த மகேஷ் குமார் ஐ.பி.எஸ்., நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, பொருளாதார குற்றப் பிரிவு காவல் பொது ஆய்வாளராக இருந்த கல்பனா நாயக் ஐ.பி.எஸ்., சென்னை ரயில்வே காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பணி விடுப்பில் இருந்து திரும்பிய அபின் தினேஷ் மோதக் ஐ.பி.எஸ்., சென்னை, பொருளாதார குற்றப் பிரிவு காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

Categories

Tech |