Categories
தேசிய செய்திகள்

7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை… விவசாயிகள் கோரிக்கை நிறைவேறுமா?…!!!

டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று நடத்த உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 40 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு செலுத்தி வருகிறார்கள்.

இதுவரை போராட்ட களத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விளக்கி சட்டபூர்வ உத்திரவாதம் ஆகிய கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |