Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

6 ஆம் வகுப்பு சிறுமி….. கடத்த முயற்சி….. வடமாநில இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

திருப்பூர் அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை வடமாநில இளைஞர் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் சத்யா நகரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரின்  11 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 25 வயதிருக்கும் வாலிபர் ஒருவர் மாணவியின்  வாயைப் பொத்தி தூக்கிச் செல்ல முயன்றபோது வாலிபரின் கைகளை கடித்து பின் மாணவி அலறவே அங்கிருந்து வாலிபர் தப்பி ஓட ஆரம்பித்தார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது தந்தை இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வாலிபரை விரட்டி பிடித்து வண்டியில் ஏறுமாறு மிரட்டி ஏற வைத்தார். பின் அவரைக் கூட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு அவர் தனியாக அழைத்துச் செல்ல திடீரென வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடினான் இளைஞன். இதில்,

மாணவியின் தந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிவப்பு சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் குழந்தையை கடத்திச் செல்ல முயன்ற காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து அதை உற்று நோக்கியவர் வடமாநிலத்தை சேர்ந்தவராகவும், குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்கையில், இப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் நலனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ரோந்து பணிகளை இங்கு தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |