Categories
தேசிய செய்திகள்

“ரக்ஷபந்தன் ஸ்பெஷல்” 14,00,000…. 6 மணி நேரத்தில் உலக சாதனை….. காவல்துறைக்கு குவியும் பாராட்டு….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆறு மணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் செய்த உலக சாதனை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு இன்றளவும் சற்று கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால், பல தரப்பு மக்கள் தொடர்ந்து பல்வேறு விழாக்களை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்பட கூடிய பிரத்யேக விழாக்களில் ஒன்றான ரக்ஷா பந்தன் விழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாட முடியாமல் வருத்தப்பட்டனர். அந்தவகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ரக்ஷா பந்தன் விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாட நினைத்த ராய்கர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், அதனோடு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக,

ஒரு உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். அதன்படி, கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் 14 லட்சம் மாஸ்குகளை பொதுமக்களுக்கு காவல்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இந்த சாதனை கோல்டன் புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் இந்த செயலுக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

Categories

Tech |