இன்று முதல் அக்டோபர் 26 வரை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி,
பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்திற்கும் திறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. 2, 3, 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் அக்டோபர் 26 வரை வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடைபெற உள்ளன. இதை தொடர்ந்து பருவத் தேர்வுகள் நவம்பர் 9ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.