இன்று கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரும், மதுரையில் 19 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து வந்த 320 தொழிலாளர்கள் உள்பட 416 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 250 பேர் வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் கடலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவது நிம்மதியை தருகிறது. அதேபோல, மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த 19 பேர் தொடர் சிகிச்சைக்குப்பின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 18 பேர் மதுரையை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் ஒருவர் விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார். நேற்று வரை மதுரை மாவட்டத்தில் 87 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் 36 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.