நேபாளம் காத்மண்டுவில் உள்ள சியாங்ஜா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கால பைரப் மேல்நிலைப்பள்ளியில் 69 வயதான துர்கா காமி என்ற முதியவர் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு சிறு வயதில் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் குடும்ப வறுமையின் காரணமாக துர்கா காமியால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக துர்கா காமி தன்னுடைய மனைவி இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்ததால் பள்ளிக்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளார்.
இவருக்கு 6 குழந்தைகள் மற்றும் 8 பேரக் குழந்தைகள் இருக்கிறது. இவர் நேபாளத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் தன்னுடைய வாக்கிங் ஸ்டிக்கின் உதவியால் மலைப் பகுதியில் இருந்த பள்ளிக்கு நடந்து செல்கிறார். மேலும் இவர் 69 வயதில் பள்ளிக்கு சென்று கல்வியின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உணர்த்தியுள்ளார்.