Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

68 நாட்களுக்கு பிறகு… அனுமதி அளித்த தமிழக அரசு… திறக்கப்பட்ட அருங்காட்சியகம்…!!

ராமநாதபுரத்தில் அரசு அருங்காட்சியத்தை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதை அடுத்து நேற்று முதல் அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அனைத்து செயல்பாடுகளும்  உத்தரவின்படி முடக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து  தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துவரும் நிலையில் அரசின் அறிவுறுத்தலின்படி 68 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் அரண்மனை பகுதியில் உள்ள இராமலிங்க விலாஸ் அருங்காட்சியகம் மற்றும் கேணிக்கரை அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அருங்கட்சியகம் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அருங்காட்சி காப்பாட்சியாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அருங்காட்சியகத்திற்கு வரும் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்துருக்க வேண்டும் என்றும், உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே அருங்காட்சியகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |