Categories
உலக செய்திகள்

இதெல்லாம் ரொம்ப அநியாயம்…. உக்ரைனுக்குள் கூலிப்படையை இறக்க இருக்கும் ரஷ்யா…. வெளியான பரபரப்பு தகவல்….!!

கிழக்கு உக்ரைனுக்கு ரஷ்யா தனது தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படையை அனுப்பியுள்ளது என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

ரஷ்யா நாட்டின் பின்னடைவைத் தொடர்ந்து அமைப்பின் மூத்த தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினர் போரில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும்  இது குறித்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது “ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு நெருக்கமானவர் என்று பெயர் பெற்ற வாக்னர் குழுவும் இதன் கூலிப்படையினரும் மாலி, லிபியா மற்றும் சிரியாவில் அராஜகம் செய்ததாக யூகிக்கப்படுகிறது.

அத்துடன் கடுமையான இழப்புகள் மற்றும் பெருமளவில் ஸ்தம்பிதமடைந்த படையெடுப்பு காரணமாக, ஆப்பிரிக்கா மற்றும் சிரியா நாட்டின் நடவடிக்கைகளின் இழப்பில் உக்ரைனுக்கான வாக்னர் பணியாளர்களை மறுஉருவாக்கம் செய்ய ரஷ்யா மிகவும் கட்டாயப்படுத்தியுள்ளது” என்று  தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 24  அன்று தொடங்கிய உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து வாக்னர் குழு உட்பட ரஷ்ய தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது பிரித்தானியா கடந்த வாரம் கூடுதல் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |