புதுச்சேரி மாநிலம் அருகே பாகூர் தென் பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு வயலில் வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (23) ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. சிலம்பரசன் மீது கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சம்பவத்தன்று திருட்டு வழக்கில் ஜாமினில் வந்த சிலம்பரசன்,கடலூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு மது குடித்துள்ளார். அதன்பிறகு நடந்து சென்ற போது வயலில் வேலை பார்த்த மூதாட்டியிடம் மொபைல் போன் பறிக்க முயன்று உள்ளார். அவர் தர மறுத்ததால் கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிலம்பரசனை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.