நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரைக்கு வந்த படம் டாக்டர். இந்த படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 8 நாட்களே ஆன நிலையில் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது.
அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் 65 கோடிக்கும் அதிகம் வசூல் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 50 கோடி வசூல் தமிழகத்தில் மட்டுமே எடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.