அசாமில் எட்டு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 644 பேர் தங்களின் ஆயுதங்களை துறந்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அசாமில் பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 644 பேர் மனம் திருந்தி தங்களின் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். இந்த நிகழ்வு கவுகாத்தி மருத்துவமனையில் உள்ள அரங்கத்தில் நடந்தது. இதில் மாநில முதலமைச்சர் சர்வானந்த சோனாவால், உயர் காவல் அலுவலர்கள் மற்றும் மூத்த அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இவர்கள் முன்னிலையில் அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளான போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எஃப்.பி.) ராவா தேசிய விடுதலை முன்னணி (ஆர்.என்.எல்.எஃப்.), கம்தாப்பூர் விடுதலை அமைப்பு (கே.எல்.ஓ.), மாவோயிஸ்ட், பெங்காலி தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எஃப்.பி), தேசிய சந்தால் விடுதலை ராணுவம் (என்.எஸ்.எல்.ஏ.), ஆதிவாசி டிராகன் போராளிகள் (ஏ.டி.எஃப்) மற்றும் அசாம் ஒருங்கிணைந்த விடுதலை முன்னணி (யூ.எல்.எஃப்.ஏ) ஆகிய எட்டு அமைப்புகளைச் சேர்ந்த 644 பேர் சரணடைந்தனர்.
இவர்களிடமிருந்து 177 ஆயுதங்கள், 1686 வெடிப்பொருட்கள், 1.93 கிலோ கிராம் வெடிமருந்துகள், 52 கையெறிக் குண்டுகள், 71 வெடிகுண்டுகள், மூன்று ராக்கெட் லாஞ்சர்கள், 58 மாதாந்திர இதழ்கள், 306 வெடிகுண்டு செயலிழக்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டன.
அரசின் முன் சரணடைந்தவர்களில் 50 பேல் உல்பா (யூ.எல்.எஃப்.ஏ) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்களில் என்.டி.எஃப்.பி. (8), கே.எல்.ஓ. (6), ஆர்.என்.எல்.எஃப் (13), மாவோயிஸ்ட் (1), என்.எஸ்.எல்.ஏ. (87), ஏ.டி.எஃப். (178) மற்றும் என்.எல்.எஃப்.பி. (301) ஆகும்.
ஆயுதப் போராட்டத்தை துறந்து ஜனநாயக பாதைக்கு திரும்பியவர்களுக்கு முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் வாழ்த்து தெரிவித்தார். மேலும், “இவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சட்டத்திட்டத்துக்குட்பட்டு செய்யும்” எனவும் கூறினார்.