ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நம்புதாளையில் 600 மீட்டர் நீளமுள்ள வலையை 15 நிமிடங்களுக்குள் குறைவான நேரத்தில் கோர்த்து முடிக்கும் மீனவ சிறுவனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்டது நம்புதாளை கிராமம். இந்த மீன்புடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கடலுக்குச் சென்று வந்ததும் மீனவர்கள் வலைகளை சரி செய்வது வழக்கம். இந்த நிலையில் நம்புதாளையை சேர்ந்த நாகூர் என்ற மீனவரின் மகன் மதிஷ் கண்ணன் மிகவும் வேகமாக 600 மீட்டர் நீளமுள்ள வலையை 15 நிமிடங்களுக்குள் குறைவான நேரத்தில் கோர்த்து மீனவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறான் இதை பார்த்த மீனவர்கள் சிறுவன் மதிஷ் கண்ணனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.