Categories
தேசிய செய்திகள்

600 ஊழியர்கள் பணிநீக்கம்…. OYO நிறுவனம் எடுத்த திடீர் முடிவு…. காரணம் இதுதான்?….!!!!!

ஆன்லைன் ஓட்டல், விடுதி முன்பதிவு நிறுவனமான OYO, தள்ளுபடி விலையில் அறைகள் வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உயர்ந்தது. இந்த நிலையயில் சமீப காலமாக OYO நிறுவனம் கடும் பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இதை சரிசெய்யும் அடிப்படையில் அந்நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக OYO நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிதேஷ் அகர்வால் கூறியதாவது “திறமையான நபர்களை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது மிகவும் துரதிஷ்டவசமானது ஆகும். இருந்தாலும் OYO நிறுவனம் மீண்டும் வளர்ச்சி பெற்று எதிர் காலத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கும்போது, அவர்களுக்கு கண்டிப்பாக முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |