மெக்சிகோ நாட்டில் பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் என்ற மாகாணத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வகுப்புகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாணவர்கள் மயங்கி விழ தொடங்கினார்கள். எனவே, மயங்கி விழுந்த மாணவர்கள் 60 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். கடந்த இரு வாரங்களில் அதே மாகாணத்தில் இருக்கும் மேலும் இரு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் விஷம் தரப்பட்டிருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல் காரணமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகமடைந்திருக்கிறார்கள்.